This website concept and creation: K.Balasubramaniyan, B.T.Assistant in English. Govt. High School, Kattimedu 9578307898

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

 வரவேற்பறை

அன்பான அனைவருக்கும் வணக்கம் !

    தமிழ் நாடு ,திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி   வட்டம். கட்டிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி வலை தளத்திற்கு  உங்களை அன்போடு வரவேற்கிறோம் !


      இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் இது ஒரு புது முயற்சி !
நீங்கள் கல்விகற்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், உங்கள் பள்ளியைப்பற்றி  நீங்கள்அறிந்துகொள்ளவேண்டும்,மேலும் 
இப்பள்ளியின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்காற்றவேண்டும் என்பதே  எங்களுடைய விருப்பம்.


நம்மை  உருவாக்கியதில்  நம் பள்ளியின் பங்கு மகத்தானது
 நம்மை உருவாக்கிய நம் பள்ளியை வளர்க்க நாம் என்னசெய்ய வேண்டும் !
     
1 பள்ளி புரவலர் திட்டத்தில் சேரலாம். குறைந்த பட்ச வைப்பு தொகை ரூபாய் 1000-/ மட்டுமே.  இத்தொகை வங்கியில் நிலையான இருப்பில் வைக்கப்பட்டு, அதிலிருந்து வரும் வருமானம்   பள்ளி வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படும்.
    
2 . நீங்கள் விரும்பியவர் பெயரில் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்!.

    உங்களின் மேலான கருத்துக்களையும் , ஆதரவையும் எதிர்பார்கிறோம்!
தொடர்புகொள்ளக:
                                      tvr_ghsskattimedu@yahoo.com]